Kutty story Kutty Story | PRS Tamizha
Follows on PRS Tamizha
Instagram | Twitter | Facebook

Please Subscribe 👆👆👆 and Click 🔔 👈 Icon

புளியமரத்து பஸ் ஸ்டாப் ... !

நெடுநாட்களுக்கு பிறகு எனது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கிறேன் . நெடு நாட்கள் என்றால் பல மாதங்களோ வருடங்களோ அல்ல , மூன்றே மூன்று மாதங்கள் . பள்ளி ஆண்டு விடுமுறைக்கு கூட எங்கும் செல்லாதவன் நான் , இப்போது வீட்டை விட்டு விலகி மூன்று மாதங்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து விட்டு ( படித்தேனா இல்லையா என்பது எனக்கு மட்டும் தெரியும் ) வீட்டிற்கு செல்கிறேன் . ஆம் , உண்மையில் இது எனக்கு சாதனை தான் . வீட்டிலேயே எப்போதும் இருந்ததால் நான் கல்லூரியில் இருந்து மூன்றே நாட்களில் ஓடிவந்துவிடுவேன் என்பது எனது ஊரை சார்ந்தவரின் எண்ணங்கள் . அதை முறியடித்த பெருமையோடு வீட்டுக்கு செல்கிறேன் , இதோ என் ஊரின் ஆலமரத்து பஸ் ஸ்டாப் வந்து இறங்கிவிட்டேன் , இங்கிருந்து வீட்டிற்கு பத்து நிமிட ங்களாவது நடக்கவேண்டும் , நடக்க தொடங்கிய சிறிது நேரத்தில் சிறுவயதில் எப்போதும் எனக்கு தேன்மிட்டாய் கொடுக்கும் பாட்டி என்னை கூப்பிட அங்கே சென்றேன் . " என்னடா கண்ணு , என்ன . ? ஊருக்கு போயிட்டு வரியா , இப்போ தான் வரியா . ? " என வாயில் புகையிலை மடித்த வெற்றிலையை குதப்பிகொண்டே கேட்க , சிறு முறுவலுடன் நான் " இல்ல பாட்டி , நான் காலேஜ்க்கு போய்ட்டுவரேன் " என பதில் அளித்தேன் . " காலேஜா . ! எந்த ஊருல படிக்குற . ? " " சென்னைல படிக்கிறேன் பாட்டி . !! " " மெட்ராஸ்லயா !! " என சிறிது ஆச்சர்யத்துடன் வாய் திறக்க .. ஆமா பாட்டி , அங்கேயே காலேஜ்லயே ஹாஸ்டல் இருக்கு , அங்கேயே தங்கிக்குறேன் . " " காலேஜ்லயே தங்கி படிக்கிறியா , நல்லா படி " என வாழ்த்தி அனுப்பினார் . நான் வழியை பார்த்து திரும்பியவுடன் அந்த பாட்டி " இம்புட்டூண்டு இருப்பான் அப்போ , எட்டணா எடுத்து க்கிட்டு வந்து கை நெறைய தேன் மிட்டாய் கேப்பான் , கம்மியா குடுத்தா அந்த பொட்டுக்கண்ணு வச்சிக்கிட்டு மொறைச்சு மொறைச்சு பாப்பான் . ஒரு மிட்டாய் சேத்து குடுத்தாத்தான் சந்தோசமா போவான் , இன்னைக்கு இம்புட்டு ஒசரமா பனைமர கணக்கா வளந்துட்டான் . இந்த பசங்களலாம் பாத்தா தான் நமக்கு காலம் நெருங்கிரு ச்சுனு தெரியுது " என தனக்கு தானே பேசிக்கொண்டார் . உண்மையில் அவர் சொன்னது உண்மை தான் , நான் எப்போதும் அடம்பிடித்தோ அல்லது முறைதோ ஒரே ஒரு தேன்மிட்டாயாச்சும் கூடுதலாக வாங்கி சாப்பிடாமல் போனால் எனக்கு நாள் முழுமையடையாது போலவே இருக்கும் , அதை இன்னும் இந்த சிடுமூஞ்சி பாட்டி மறக்கவில்லை ஆனால் நான் சென்னையில் கல்லூரியில் சேருவதை அவரிடமும் சொல்லிவிட்டு போனதை மறந்துவிட்டார் . முதுமையின் பலன் . வழி நெடுகிலும் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் விசாரிக்க அனைவருக்கும் பதில் கூறிவிட்டு திரும்பினேன் , என்வயது இருக்கக்கூடியயாரோ ஒருவன் என்னை பார்த்து புன்னகைத்துவிட்டு பதில் ஏதும் எதிர்பாராமல் செல்கிறான் . யார் இவன் , எனது சொந்த க்காரனும் இல்லை , எனது பள்ளி நண்பனும் இல்லை , எனது தெருவை சேர்ந்தவனும் இல்லை , ஆனால் இவனை பார்க்கும்போதெல்லாம் எப்போதும் ஒரு புன்னகையை மட்டும் விட்டு சென்று இருக்கிறேன் . இவன் எப்படி எனக்கு பழக்கமானவன் என தெரிந்து கொள்ள எனது பழைய நினைவுகள் எல்லாம் நினைவு கொணர என் முகத்தின் முன் கொசுவத்தி சுத்த ஆள் இல்லாத காரணத்தால் சாதாரணமாகவே நடந்துகொண்டே யோசித்தேன் . இன்றிருந்து ஒரு பத்து வருடங்கள் இருக்கலாம் . எப்போதும் போல நான் பள்ளிக்கு விறுவிறுப்பாக ( வெள்ளிக்கிழமை என்பதால் , நாளை விடுமுறை என்பதால் ) கிளம்பிக்கொண்டு இருக்கிறேன் . எங்கள் தெருவின் இரண்டாம் முற்றத்தில் உள்ள புளியமரம் தான் எங்கள் பள்ளி பேருந்து நிறுத்தம் . பேருந்து அங்கு வரும்முன் ஒரு திருப்பத்தில் எங்கள் பள்ளி ஓட்டுநர் ஹார்ன் அடிப்பார்.அதைகேட்டவுடன் எங்கள் வீட்டிலிருந்து அங்கு ஓடிவிடலாம்.எனினும் நானும் , என்னுடன் பள்ளிக்கு வரும் அனைவரும் அங்கு எப்போதும் ஒரு அரைமணி நேரம் முன்பு அங்கு சென்று பேருந்திற்காக காத்திருப்போம் , பேருந்திற்காக என்று சொல்வதற்கு பதில் அங்கு அனைவரும் வந்து சேர்ந்தவுடன் விளையாடவே அனைவரும் அங்கு காத்திருப்போம் , அன்றும் அதுபோலவே வேகமாக அங்கு செல்கிறேன் . வீட்டிலிருந்து செல்லும்போதே என்னுடைய ஐந்து ருபாய் பெப்சி பந்தை பத்திரமாக எடுத்து பையினுள் வைத்துக்கொண்டு , போகும்வழியில் அம்மா தலையில் கொட்டியதால் அங்கு இருக்கும் பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு ( இப்போது அந்த கோவிலை சாங்கியதிற்கு கூட திரும்பி பார்ப்பதில்லை என்பது வேறு விஷயம் ) எங்கள் புளியமர பஸ் ஸ்டாப்பிற்க்கு ஓடிக்கொண்டு இருக்கிறேன் . எல்லாரும் என்னைப்போலவே அங்கு வந்து இருந்தனர் . நாங்கள் எதிர்பாத்தபடியே அன்று பேருந்தும் வர தாமதமானது . நான் எடுத்து வைத்திருந்த பந்தை வெளியே எடுத்து விளையாட ஆரம்பித்தோம் . சாலையின் இருபுறமும் நின்றிருக்க யாரும் சாலையில் போகாதபோது நாங்கள் பந்து வீசி பிடித்து விளையாடுவோம் . அன்று அப்படி விளையாடியபோது என்னிடம் வீசப்பட்ட பந்தை நான் தவறவிட்டுவிட்டேன் , அந்த பந்தானது எனக்கு பின்னே இருந்த ஒரு தெருவுக்குள் சென்றது . அந்த இடத்தில் தெரு ஒன்று இருப்பதையே பந்து அந்த தெருவுக்குள் போகும்வரை நான் கவனித்ததி ல்லை , எங்கள் ஊரில் எனக்கு தெரிந்த தெருக்கள் அனைத்தும் சாலைக்கு இந்தப்பக்கம் மட்டுமே இருந்தது , சாலைக்கு அந்தப்பக்கமும் ஒரு தெரு இருந்ததை நான் ஒருமுறையேனும் கவனித்ததும் இல்லை . நான் மட்டுமா , ஆடி மாதத்தில் ஊர்வலம் வரும் மாரியம்மன் கூட சாலைக்கு இந்தப்பக்கம் இருந்த தெருக்களுக்கு சென்றதே தவிர அந்தப்பக்கம் சென்றது இல்லை . மாரியம்மன் இவர்களை வேண்டாம் என்றதா இல்லை இவர்கள் மாரியம்மனை வேண்டாம் என்று விட்டு விட்டனரா என தெரியவில்லை . ஒருவேளை அந்த தெருவிற்குள்ளேயே ஒரு கோவில் உள்ளதா என்பதும் இன்றைய நாள் வரை எனக்கு தெரியவில்லை . இன்றளவும் நான் யோசித்துப்பார்த்தால் நான் அவர்களுடன் பகிர்ந்துகொண்டது ஊர் சாலை , ஊர் தபால் ஆபீஸ் ஒழிய வேறேதுமில்லை , ட்ரான்ஸ்பார்மர் கூட அங்கு தனியாக உண்டோ என நினைக்கிறன் . வேகமாக உருண்டோடிய பந்து அந்த தெருவின் முடிவு வரை சென்று தேடியும் கிடைக்கவில்லை , அக்கம் பக்கம் பார்த்ததில் கிட்டத்தட்ட என் வயது இருக்கக்கூ . டிய சிறுவன் , இந்த கையில் இருந்து அந்த கைக்கு பந்தை மாற்றி மாற்றி போட்டு விளையாடிக்கொண்டு இருந்தான் . அவனிடம் சென்று பேச ஆரம்பித்தேன் . " இந்த பந்து என்னோடது " யாராச்சும் கேட்ட " உனதா , உருண்டு வந்துச்சு , குடுக்கலாம்னு எடுத்தேன் " " ஆமா , என்னோடது தான் , அங்க விளையாடும்போது உருண்டு வந்துருச்சு " என கூறி புளியமரத்து பஸ் ஸ்டாப்பை காட்டினேன் . " சரி , நான் பந்து குடுக்குறேன் , ஆனா என்னையும் விளையாட்டுக்கு சேத்துக்கணும் " நான் சிறிது யோசித்துவிட்டு " சரி , ஆனா இன்னைக்கு எங்க ஸ்கூல் பஸ் வந்துரும் , Saturday Sunday லீவ் , Monday நம்ம விளையாடலாம் " என்றேன் . " சரி " என பந்தை குடுத்தான் . பந்தை வாங்கிக்கொண்டு " Thanks " என சொல்லி அவனது பதிலுக்காக காத்திருக்க , அவன் என்னை பார்த்து புன்னகைத்தான் , நானும் பதிலுக்கு புன்னகை த்துவிட்டு வந்துவிட்டேன் . அதுவே எங்களுக்குள் நிகழ்த்த முதலும் கடைசியுமான உரையாடல் , அன்றிருந்து நாங்கள் எங்கேனும் நேரெதிரில் பார்த்துக்கொண்டாலும் இருவருக்கும் இடையேயான பரிமாற்றம் உள்ளத்திலிருந்து வரும் இந்த புன்னகை மட்டுமே . எங்களுக்கிடையில் இந்த சந்திப்பு நிகழ காரணமாக இருந்தது எங்கள் புளியமரத்து பஸ் ஸ்டாப் .

4 Comments

💐💐 Thanks for your comments. have a nice day. 💐💐

Post a Comment

💐💐 Thanks for your comments. have a nice day. 💐💐

Previous Post Next Post