கதை படிப்போம்வாருங்கள்
ஒருவர் மரத்தை வெட்டிக்கொண்டிருக்கிறார். அவர் கையை மட்டும் காட்டுகிறார்கள். அவர் பெயர் மாரிமுத்து. அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் லாரி ஒன்று அவர் மீது மோதி கீழே விழுந்து தலையில் அடிபட்டு இரத்தம் வர அவரை சிவசாமி என்கிற அவன் நண்பர் ஒருவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். மாரிமுத்துவின் கண்கள் மயங்கும் வேளையில் அவர் முன் ஒரு நிலலுறுவம் ஒன்று தோன்ற அதன் காட்சியோ எருமை மாடு போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறது. காட்சியளித்த உறுவம் மாரிமுத்துவிடம் கூறுவன? வாழும் போதெல்லாம் பிறர் உயிர்களை அழிக்கின்றாய். இறக்கும் வேளையில் பயப்படுகிறாயே ஏன் ? நான் உனக்கு ஒரு கடைசி வாய்ப்பினை அளிக்கின்றேன். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புன்னியத்தை தேடிக்கொள் என்றதும் மாரிமுத்துவின் கண்கள் மூட தொடங்கவும் அவரது நண்பர் சிவசாமி அருகில் வருந்து மாரிமுத்துவின் அருகில் அமர்ந்து அவரின் தளர்வை நீக்க அருகில் உள்ள வாழைப்பழம் ஒன்றை எடுத்து உண்ணுகையில் சிவசாமியில் பையில் இருந்து கைபேசியில் சப்தம் வருகிறது. அவர் கைபேசியை எடுத்து பேச ஆரம்பிக்கிறார் அவர் பேசுவது யாதென "Hello யார்" என்று கேட்க கைபேசியில் அழைப்பானது துண்டித்து விடுகிறது. அவர் பேசிக்கொண்டே ஸ்டெத்தஸ்கோப்பை எடுத்து தோள்பட்டையில் வைக்கிறார்.
மாரிமுத்துவின் உடல் நிலையை அறிய மருத்துவச்சி வருகிறார் அவ்வப்போது சிவசாமியின் தோள்பட்டையில் இருந்து ஸ்டெத்தஸ் கோப்பை எடுக்கவும் சிவசாமி கூறுவன வாருங்கள் செவிலியர் அம்மா என்றதும் மருத்துவச்சி கூறுவது நான் செவிலியர் அல்ல மருத்துவச்சி என்று உரைக்கிறார். மருத்துவச்சி மாரிமுத்துவின் உடல் நிலையை சோதித்து பார்த்து உடல் நலம் சரியான நிலையில் உள்ளது எனவே தாங்கள் இன்று மாலை இங்கிருந்து கிளம்பலாம் என்று கூறி மருத்துவச்சி கிளம்புகிறார்.
மாரிமுத்து கண் முழிக்கிறார் மாரிமுத்து முழித்து சிவசாமியிடம் கேட்கிறார் யாருல அது என்று கேட்டதும் சிவசாமி கூறுவன யாருமில்லை அது செவிலியர் தான் என்று கூறுகிறார். அது செவிலியர் அல்ல. வேரு யாரோ ஒருவர் நின்றது போல் தான் இருந்து என் கண்களுக்கு. அதற்கு சிவசாமி மாரிமுத்துவிடம் கூறுவது உனக்கு தலையில் அடி பட்டிருக்கிறது என்று கூறி கிளம்புகிறார்கள் இருவரும். மாரிமுத்து படுக்கையில் தூங்காமல் விட்டத்தை பார்த்து சிந்தித்து கொண்டிருக்கிறார் சில நேரங்களில் அவர் கண்கள் தூக்கத்தின் நிலமைக்கு செல்ல இருக்கையில் மீண்டும் கருமை உறுவம் ஒன்று தோன்றுகிறது. ஏதோ ஒரு சப்தம் கேக்க "உன் மூச்சை நிறுத்தி விடுவேன் என்று" கேட்டதும் மாரிமுத்து உறக்கத்தில் இருந்து விழித்து விடுகிறார். விழித்ததும் பக்கத்தில் இருந்த பானையில் இருந்த நீரை பருகி விட்டு உறங்க தொடங்கி விட்டார். அதன் பிறகு காலை விடிய துவங்குகிறது. பின் மாரிமுத்து படுக்கையில் இருந்து எழுந்ததும் மீண்டும் வந்த உறுவத்தை நினைத்து சிந்திக்க தொடங்கி விட்டார். அவ்வப்போது அவர் நண்பணான சிவசாமி வந்து என்னல வேலைக்கு போலாமா என்று கேட்கிறான் சிவசாமி. அதற்கு மாரிமுத்து அவருக்கு உடல் வலியாக இருக்கிறது என்று கூறுகிறார் சிவசாமியிடம். சிவசாமியுடன் வேலை செய்யும் ஒருவர் சிவசாமியை ஏலே சிவ சாமி வாலே வேலைக்கு செல்லலாம் என்று அழைக்கிறார். அதன்பின் சிவசாமி கூறுவன இரு வரேம் ல பொரு என்கிறார். பின் மாரிமுத்துவிடம் உடம்பை பார்த்து கொள் என்று சொல்லிவிட்டு வேலைக்கு செல்கிறார். சிவசாமி சென்றதும் மீண்டும் மாரிமுத்து தனியாக சிந்திக்க தொடங்கி விட்டார். அவரின் எண்ணமோ யார் பேசியது அது என்பதே என்று சிந்தித்து திரும்ப காற்று வேகமாக வீச அவர் மரங்களை நோக்கி பார்த்து கொண்டே அவர் கண்களை மூடுகிறார்.
"காற்று சுவாசிக்கும் மூற்று மரம்" என்றதும் மாரிமுத்து கண் விழிக்கிறார். பின்பு மரத்தை நடுகிறார் மாரிமுத்து. அந்நேரத்தில் மாரிமுத்து புரிந்து கொள்வன இதுவரையிலும் நாம் செய்தது தவறு. மேலும் இத்தவறை செய்ய கூடாது என்று மரத்தை நடுகிறான் மாரிமுத்து. அவ்வாறு மரத்தை நட்டிய சில வருடங்களுக்கு பிறகு பருவம் மிகுந்த தோப்பாக மாற்றி விட்டார். பின் மாரிமுத்துவும், சிவசாமியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பேசுவன "நமது தொழிலே மரம் வெட்டுவது தான் நீ எதற்காக மரம் வெட்டும் தொழிலை கைவிட சொல்கிறாய் என்கிறார்". சிவசாமி, சிறு புன்னகையுடம் மாரிமுத்து இது எல்லாம் ஒரு காரணத்திற்காக தான் என்கிறான். சிவசாமிக்கு மாரிமுத்து சொல்வது புரியவில்லை ஆகையால் அவர் தலை சொறிந்தாற் போல் நான் நீர் பாய்ச்ச செல்கிறேன் என்று கூறி கிளம்புகிறார். பின் மாரிமுத்து இருக்கும் இடத்தை விட்டு கிளம்பி சுற்றி புன்னகையுடன் செல்கிறார் அப்போது அந்த உறுவம் அவர் கண்முன் தோன்றி மறைகிறது.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்!!! நம் சமுதாயம் காப்போம் !!!
Super
ReplyDeleteWow nice story
ReplyDeletePost a Comment
💐💐 Thanks for your comments. have a nice day. 💐💐